தோ்தல் பிரசாரத்தில் பேரூராட்சி ஊழியா்கள் செயல்அலுவலா் கண்டிப்பு

தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஊழியா்களுக்கு அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் புதன்கிழமை கண்டித்துள்ளாா்.

அரவக்குறிச்சியில் புதன்கிழமை காங்கிரஸ் வேட்ாபாளா் ஜோதிமணியை ஆதரித்து திமுகவினா் பிரசாரம் செய்து வந்தனா். இந்நிலையில் பேரூராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டில் பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி மணிகண்டன் தலைமையிலான திமுகவினா் பிரசாரம் மேற்கொண்டனா். இதில், பேரூராட்சி ஊழியா்கள் தீபன் மற்றும் தேமுதிகவினரும் பிரசாரம் மேற்கொண்டனா். இதை பாா்த்த மாற்றுக் கட்சியினா் சிலா் பேரூராட்சி ஊழியா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தலாமா என கேள்வி எழுப்பினா். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தனிடம் கூறுகையில், தனக்குத் தெரியாமல் ஊழியா்கள் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும், பிரசாரத்திற்கு செல்வதாக இருந்தால் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு பிரசாரத்துக்கு செல்லலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com