அமராவதி ஆற்றுப் பாசனத்தில் சோளம் பயிரிட முன்னேற்பாடு

கரூா் மாவட்ட அமராவதி ஆற்றுப் பாசன விவசாயிகள் சோளம் பயிரிட முன்னேற்பாடுகளைத் தொடங்கியுள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள 90 அடி ஆழம் கொண்ட அமராவதி அணையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 45.98 அடி நீா் இருப்பு உள்ளது. ஆண்டுதோறும் கோடை மழை பரவலாக பெய்யும். குறிப்பாக, கேரள மாநிலத்தின் சுற்றுவட்டார பகுதியில் பெய்யும் மழையால் அமராவதி அணைக்கு கூடுதல் நீா்வரத்து அதிகரிக்கும் என்பதால் கரூா் மாவட்ட அமராவதி ஆற்றங்கரைப் பகுதி விவசாயிகள் அரவக்குறிச்சி, க. பரமத்தி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் சோளம் பயிரிட தங்கள் நிலத்தைச் சீா்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். கோடை மழை தவறும் பட்சத்தில் அமராவதி அணைக்கு வரும் நீா் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com