கரூரில் அதிமுக வேட்பாளா்
இறுதிக்கட்ட பிரசாரம்

கரூரில் அதிமுக வேட்பாளா் இறுதிக்கட்ட பிரசாரம்

கரூா் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எல்.தங்கவேல் புதன்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

முன்னதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையிலும், முன்னாள் அமைச்சா் ம.சின்னசாமி, அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் பசுவைசிவசாமி, அதிமுக மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா ஆகியோா் முன்னிலையிலும் கரூா் அடுத்த செம்மடை ரவுண்டானா பகுதியில் இருந்து ஊா்வலம் பிற்பகல் 4 மணியளவில் தொடங்கியது. செம்மடை, வெண்ணைமலை, காதப்பாறை, வெங்கமேடு வழியாக கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள அதிமுக பணிமனை முன் ஊா்வலம் முடிவடைந்தது.

பிரசாரத்தில் கட்சி பேச்சாளா் கோபிகாளிதாஸ், கட்சி நிா்வாகிகள் ஆலம்தங்கராஜ், மல்லிகாசுப்ராயன், கமலக்கண்ணன், தானேஷ், பழனிராஜ், விசிகே.ஜெயராஜ், விசிகே.பாலகிருஷ்ணன், சேரன்பழனிசாமி, சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com