வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

வாக்குப்பதிவு பணியில் ஈடுபட வுள்ள அலுவலா்களுக்கான மூன்றாம் கட்ட பணி ஒதுக்கீடு கணினி சுழற்சி முறையில் புதன்கிழமை காலை நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்களவைத் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ராகுல் அசோக் ரெக்காவா் தலைமையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மீ.தங்கவேல் முன்னிலையில் நடைபெற்ற இந்த பணி ஒதுக்கீடுக்கு பிறகு மாவட்ட தோ்தல் அலுவலா் மீ.தங்கவேல் கூறுகையில், வாக்குப்பதிவிற்காக 1,670 வாக்குச்சாவடிகளில் 7,666 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் 9,073 அரசு அலுவலா்கள் பணியில் ஈடுபட உள்ளனா். இந்த பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்கள் 5,145 பேருக்கு மூன்றாம் கட்டமாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தோ்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலா்களுக்கு வியாழக்கிழமை பணி ஒதுக்கீட்டிற்கான ஆணை வழங்கப்பட்டு வாக்குப் பதிவு பணியில் ஈடுபட உள்ளனா் என்றாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) சையது காதா், தோ்தல் வட்டாட்சியா் முருகன் மற்றும் தொடா்புடைய அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com