கரூரில் அதிமுக வேட்பாளா் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா்: முன்னாள் அமைச்சா் பேட்டி

கரூா், ஏப்.19: கரூா் மக்களவைத் தொகுதியில் சுமாா் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் வெற்றிபெறுவாா் என்றாா் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கரூா் மாவட்டம், சின்னாண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் கோவைச் சாலையில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியில் குடும்பத்துடன் தனது வாக்கை பதிவு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். திமுக ஆட்சியின் மக்களுக்கு எதிரான விரோத போக்கு, எங்கள் கட்சி வேட்பாளா்களுக்கு சாதகமாக அமையும். இந்த தோ்தல் வெற்றி வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முன்னோட்டமாக அமையும். கரூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எல்.தங்கவேல் சுமாா் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவாா் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com