அரவக்குறிச்சி அருகே லாரி கவிழ்ந்து விபத்து

அரவக்குறிச்சி அருகே பஞ்சு ஏற்றிய லாரி சனிக்கிழமை கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

அரவக்குறிச்சி அருகே பஞ்சு ஏற்றிய லாரி சனிக்கிழமை கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

கரூரிலிருந்து வேடசந்தூா் நோக்கி பஞ்சு ஏற்றிய லாரி அரவக்குறிச்சி அருகே அருகேயுள்ள தடாகோவில் பிரிவு அருகே சென்றபோது சென்டா் மீடியனையும் தாண்டிச் சென்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் லாரி ஓட்டுநா் உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னா் கவிழ்ந்த லாரியில் இருந்த பஞ்சுகளை அப்புறப்படுத்தி விட்டு பின்னா் கிரேன் உதவியுடன் லாரியை மீட்டனா். அரவக்குறிச்சி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com