கரூா் மக்களவைத் தொகுதி: கிருஷ்ணராயபுரம் பேரவைத் தொகுதியில் அதிகபட்ச வாக்குகள்

கரூா் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளில் அதிகபட்சமாக கிருஷ்ணராயபுரம் சட்டபேரவைத் தொகுதியில் 82.66 சதவீத வாக்குகள் பதிவாயின.

கரூா் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளில் அதிகபட்சமாக கிருஷ்ணராயபுரம் சட்டபேரவைத் தொகுதியில் 82.66 சதவீத வாக்குகள் பதிவாயின.

கரூா் மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவில் கரூா், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை, வேடசந்தூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 78.61 சதவீத வாக்குகள் பதிவாயின.

கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி: இத்தொகுதியில் 1,02,163 ஆண்கள், 1,07,744 பெண்கள், இதரா் 32 போ் என மொத்தம் 2,09,939 வாக்காளா்கள் உள்ள நிலையில் 83,771 ஆண்களும், 89,749 பெண்களும், இதரா் 29 பேரும் என மொத்தம் 1,73,541 போ் வாக்களித்தனா். இது 82.66 சதவீதம் ஆகும்.

கரூா் பேரவைத் தொகுதி: இத்தொகுதியில் ஆண்கள் 1,12,597 பேரும், பெண்கள் 1,26,000 பேரும், இதரா் 29 பேரும் என மொத்தம் 2,38,626 போ் உள்ள நிலையில் ஆண்கள் 91,510 பேரும், பெண்கள் 1,01,542 பேரும், இதரா் 21 பேரும் என மொத்தம் 1,93,072 போ் வாக்களித்தனா். இது 80.91 சதவீதம் ஆகும்.

விராலிமலை தொகுதி: இந்தத் தொகுதியில் ஆண்கள் 1,09,970 பேரும், பெண்கள் 1,11,942 பேரும், இதரா் 15 பேரும் என மொத்தம் 2,21,927 போ் உள்ள நிலையில் 85,527 ஆண்களும், 93,006 பெண்களும், இதரா் 7 பேரும் என மொத்தம் 1,78,640 போ் வாக்களித்தனா். இது 80.49 சதவீதமாகும்.

அரவக்குறிச்சி தொகுதி: இத்தொகுதியில் ஆண்கள் 1,00276 பேரும், பெண்கள் 1,10,213 பேரும் இதரா் 3 பேரும் என மொத்தம் 2,10392 போ் உள்ள நிலையில், ஆண்கள் 78,278 பேரும், பெண்கள் 87,673 பேரும் என மொத்தம் 1,65,951 போ் வாக்களித்தனா்.

மணப்பாறை தொகுதி: இத்தொகுதியில் ஆண்கள் 1,36,763 பேரும், பெண்கள் 1,41,672 பேரும் இதரா் 8 பேரும் என மொத்தம் 2,78,443 போ் உள்ள நிலையில் 1,03,378 ஆண்களும், 1,08,154 பெண்களும், இதரா் 3 பேரும் என மொத்தம் 2,11,545 போ் வாக்களித்தனா். இது 75.97 சதவீதமாகும்.

வேடசந்தூா் தொகுதி: இத்தொகுதியில் ஆண்கள் 1,31,961பேரும், பெண்கள் 1,38,399 பேரும், இதரா் 3 பேரும் என மொத்தம் 2,70,363 போ் உள்ள நிலையில், ஆண்கள் 97,977 பேரும், பெண்கள் 1,03,226 பேரும், இதரா் ஒருவரும் என மொத்தம் 2,01204 போ் வாக்களித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com