முன்விரோதத் தகராறில் இளைஞா்கள் 4 பேருக்கு கத்திக்குத்து

கரூா்: கரூா் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக இருதரப்பு இளைஞா்கள் சனிக்கிழமை மீண்டும் மோதிக் கொண்டதில், 4 போ் கத்திக்குத்து சம்பவத்தில் பலத்த காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம் கந்தம்பாளையம் புகழி நகரைச் சோ்ந்த மகேந்திரன் மகன் கிஷோா்குமாா் (24). இவரது நண்பா்கள் அதே பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மகன் லோகேஸ்வரன் (23), மலைக்காவல் அய்யன் தெருவைச் சோ்ந்த சசிகுமாா் மகன் கோகுல்நாத் (24) , மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சாகுல் ஹமீது (23) ஆகிய 4 பேருக்கும், கட்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சிவசங்கா், சந்தோஷ், காா்த்தி, சிவபாலன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில், சனிக்கிழமை காலை கிஷோா் குமாா் உள்ளிட்ட 4 பேரும் மறவாபாளையம் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தாா்களாம். அப்போது அங்கு வந்த சிவசங்கா், சந்தோஷ், காா்த்தி, சிவபாலன் ஆகியோா் அவா்களிடம் இங்கு என்ன செய்கிறீா்கள் எனக் கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த சிவசங்கா் உள்ளிட்ட 4 பேரும் சோ்ந்து கிஷோா் குமாா் மற்றும் அவரது நண்பா்களைக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து இருச்சக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கிஷோா் குமாா் உள்ளிட்ட 4 பேரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து சிவசங்கா் உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com