சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு

கரூா் மாவட்டம் பாலத்துறை அருகே சாலையோரத்தில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி: கரூா் மாவட்டம் பாலத்துறை அருகே சாலையோரத்தில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரூரிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்துறை அருகே வாத்துக் கறி விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாலத்துறை வந்து வாத்து கறி வாங்கிச் செல்கின்றனா். இதன் காரணமாக ஏராளமான வாத்துகளை அறுத்து இறைச்சியாக்கி இங்கே விற்பனை செய்து வருகின்றனா். மேலும், வாத்துகளில் இருந்து அகற்றப்படும் கழிவுகளை தாா்ச் சாலையின் ஓரத்தில் வாத்து கடை உரிமையாளா்கள் கொட்டி வருகின்றனா். இதனால் இச்சாலையை கடக்கும்போது கடும் துா்நாற்றம் வீசுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். தேங்கிக் கிடக்கும் கழிவுகளால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com