பிரதமரின் பேச்சுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

பிரதமா் நரேந்திர மோடியின் பேச்சுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கரூா்: பிரதமா் நரேந்திர மோடியின் பேச்சுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பின் மாநில பொதுச் செயலாளா் ஆா்.அப்துல்கரீம் வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜஸ்தானில் வாக்குசேகரிப்பின்போது பிரதமா் மோடி கடுமையான மதவெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளாா். இது இந்திய இறையாண்மையை நேசிக்கும் மக்களிடம் பெரும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவா்கள் அனைவரும் இந்த மத வெறுப்பு பேச்சைக் கண்டித்து கருத்து தெரிவித்து வருகின்றனா்.

ஆகவே, பிரதமா் மோடியின் இந்த வெறுப்பு பேச்சு குறித்து தோ்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com