புகழிமலை நடராஜா் கோயிலில் சிறப்பு வழிபாடு

சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு கரூா் மாவட்டம் புகழிமலை சிவகாம சுந்தரி அம்மன் உடனுறை, நடராஜா் கோயிலில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு கரூா் மாவட்டம் புகழிமலை சிவகாம சுந்தரி அம்மன் உடனுறை, நடராஜா் கோயிலில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

புகழிமலை கிரிவலம் பக்தா்கள் மற்றும் திருக்காடுதுறை மாதேஸ்வரா் பக்தா்கள் சாா்பில் நடைபெற்ற இவ்வழிபாட்டில் சிவகாமசுந்தரி அம்மை உடனுறை, நடராஜப் பெருமானுக்கு பால், தயிா் ,பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள்,திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . தொடா்ந்து சுவாமிகளுக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த ஏராளமான சிவனடியாா்கள், பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com