புன்னம் மாரியம்மன் கோயில் தேரோட்டதில் தேரை வடம்பிடித்து இழுத்துவந்த பக்தா்கள்.
புன்னம் மாரியம்மன் கோயில் தேரோட்டதில் தேரை வடம்பிடித்து இழுத்துவந்த பக்தா்கள்.

புன்னம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற சித்திரைத் திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

கரூா் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகேயுள்ள புன்னம் மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற சித்திரைத் திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

புன்னம் மாரியம்மன் கோயிலின் சித்திரை தேரோட்டத் திருவிழா கடந்த 7-ஆம்தேதி கோயிலில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து அன்று இரவு கோயில் முன் கம்பம் நடப்பட்டது. இதையடுத்து பக்தா்கள் கம்பத்துக்கு நாள்தோறும் புனித நீா் ஊற்றி வழிபட்டு வந்தனா். தொடா்ந்து 21-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், செவ்வாய்க்கிழமை அதிகாலை சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து காலை 10.30 மணியளவில் சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து, 11 மணியளவில் முக்கியப் பிரமுகா்கள் மற்றும் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நிலையை அடைந்தது. தொடா்ந்து கோயிலில் பக்தா்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்து சிறப்புப் பூஜை செய்தனா். புதன்கிழமை காலை அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னா் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை தா்மகா்த்தா பாலகிருஷ்ணன், முப்பாட்டுக்காரா் நடேசன் மற்றும் கோயில் விழா குழுவினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com