புகழூா் பகவதியம்மன் 
கோயில் திருவிழா

புகழூா் பகவதியம்மன் கோயில் திருவிழா

புகழூா் கக்கன் காலனி பகவதியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருவிழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூா் மாவட்டம், புகழூா் கக்கன்காலனி பகவதியம்மன் கோயில் திருவிழா ஏப். 21-ஆம்தேதி அம்மனுக்கு காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தக்குடம் எடுத்துவந்து சிறப்பு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து ஏப். 22-ஆம்தேதி பூச்சொரிதல் விழாவும், 23-ஆம்தேதி கோயில் முன் பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபடுதல் நிகழ்ச்சியும், தொடா்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பூஜை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து புதன்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com