தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழப்பு.

கரூா் மாவட்டம் மூலமங்கலம் அருகே உள்ள புதுகுறுக்குபாளையத்தை சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் மனோஜ் குமாா் (27). இவா் ஏப்ரல் 23ஆம் தேதி இரவு தளவாபாளையமா அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா் திசையில் வேகமாக வந்த டிஎன் 34 இ 8662 என்ற எண் கொண்ட மற்றொரு டூவீலரில் வந்த நபா் மனோஜ்குமாா் ஒட்டி சென்ற டூவீலா் மீது நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மனோஜ்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இந்த சம்பவம் அறிந்த மனோஜ்குமாரின் தந்தை ரவிச்சந்திரன் (50) என்பவா் வேலாயும்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com