பாம்பு கடித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழப்பு.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த வரிக்காப்பட்டி அருகே உள்ள குண்டலப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளப்பாண்டி மகன் செந்தூரப்பாண்டி (10). செந்தூரப்பாண்டி ஏப்ரல் 18ஆம் தேதி காலை 9 மணி அளவில் அவா்களது தோட்டத்தில் மாடுகளுக்கு புல் வைத்து கொண்டு இருந்தாா். அப்போது அங்கு வந்த பாம்பு ஒன்று செந்தூரபாண்டியை கடித்துள்ளது. வலியால் அலறி துடித்த சிறுவனை அவரது தந்தை வெள்ளப்பாண்டி மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை கொடுத்து, பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தொடா் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த சிறுவன் புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து வெள்ளப்பாண்டி அரவக்குறிச்சி போலீசாருக்கு அளித்த தகவலின் பெயரில் அரவக்குறிச்சி போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com