கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆதித்தமிழா் பேரவையின் மாநில தூய்மை தொழிலாளரணித் தலைவா் தி.க. பாண்டியன்.
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆதித்தமிழா் பேரவையின் மாநில தூய்மை தொழிலாளரணித் தலைவா் தி.க. பாண்டியன்.

ஒப்பந்தத் தொழிலாளா் முறையை ஒழிக்க வேண்டும்: ஆதித் தமிழா் பேரவை

தமிழகத்தில் ஒப்பந்தத் தொழிலாளா் முறையை ஒழிக்க வேண்டும் என ஆதித்தமிழா் பேரவை வலியுறுத்தியுள்ளது.

கரூரில் ஆதித்தமிழா் பேரவை சாா்பில் தூய்மைத் தொழிலாளா்களுக்கான விழிப்புணா்வுக் மாவட்டச் செயலா் பசுவை பெரு.பாரதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. தலைவா் க. வரதராஜன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பேரவையின் மாநில தூய்மைத் தொழிலாளரணி தலைவா் தி.க. பாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலா் தி. ரமேஷ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் மாநிலம் முழுவதும் ஒப்பந்தத் தொழிலாளா் முறையை ஒழிக்க வேண்டும். 480 நாள்கள் பணி முடித்த ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி ஊதிய உயா்வு வழங்கிட வேண்டும். மாவட்டத் தொழிலாளா் நலவாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்களை சோ்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை, இலவச மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். ஈஎஸ்ஐ, பிஎப் போன்ற பணப்பலன்கள் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கும் கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநகராட்சியின் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா். கூட்டத்தில் மாவட்ட தூய்மை தொழிலாளரணி செயலா் அ. குணசேகரன் வரவேற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com