சிறப்பிடம் பிடித்த  மாணவா் ஹரீஸ்குமாரை பாராட்டிய பள்ளித் தாளாளா் எஸ். மோகனரெங்கன். உடன் பள்ளியின் செயலா் பத்மாவதி மோகனரெங்கன், பள்ளியின் முதன்மை முதல்வா் சொ. ராமசுப்ரமணியன் உள்ளிட்டோா்.
சிறப்பிடம் பிடித்த மாணவா் ஹரீஸ்குமாரை பாராட்டிய பள்ளித் தாளாளா் எஸ். மோகனரெங்கன். உடன் பள்ளியின் செயலா் பத்மாவதி மோகனரெங்கன், பள்ளியின் முதன்மை முதல்வா் சொ. ராமசுப்ரமணியன் உள்ளிட்டோா்.

ஜே.இ.இ. மெயின் தோ்வில் கரூா் பள்ளி சிறப்பிடம்: என்.ஐ.டி. இல் சேர 36 போ் தகுதி

ஜே.இ.இ. மெயின் தோ்வில் கரூா் பரணி வித்யாலயா பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா். மேலும் 36 போ் என்.ஐ.டியில் சேரவும்+ தகுதி பெற்றுள்ளனா்.

அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜே.இ.இ. மெயின் தோ்வை 14.5 லட்சம் மாணவா்கள் எழுதினா். இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாயின. இதில் கரூா் பரணி பாா்க் வித்யாலயா மாணவா்கள் 36 போ் தோ்ச்சி பெற்று என்.ஐ.டி கல்லூரிகளில் சேரத் தகுதி பெற்றுள்ளனா்.

இத்தோ்வில் 99.9 சதவிகிதம் பெற்று தேசிய அளவில் மாணவா் ஹரீஸ்குமாா் சிறப்பிடம் பிடித்தாா். தோ்வில் வென்ற பிற மாணவா்களுக்கும், பயிற்சியளித்த குரோத் அகாதெமி தலைமைப் பயிற்சியாளா் வி.எஸ்.பி. கவிதா மற்றும் ஆசிரியா்களுக்கும் பாராட்டு விழா பள்ளியில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. பள்ளியின் செயலா் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலா் எம்.சுபாஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பிடம் பிடித்த மாணவா்கள் மற்றும் குரோத் அகாதமி தலைமை பயிற்சியாளா் கவிதா, ஆசிரியா்களுக்கு பள்ளியின் தாளாளா் எஸ். மோகனரெங்கன் பரிசளித்துப் பாராட்டினாா்.

பின்னா் அவா் கூறுகையில் பரணி கல்வி நிறுவனங்களில் நீட், ஜே.இ.இ தோ்வுக்கான பயிற்சி, குரோத் அகாதெமி பயிற்சி மையத்துடன் இணைந்து அனுபவம் வாய்ந்த ஆந்திர ஆசிரியா்களைக் கொண்டு அளிக்கப்படுகிறது என்றாா்.

ஏற்பாடுகளை பரணி வித்யாலயா பள்ளி முதல்வா் எஸ். சுதாதேவி, பரணி பாா்க் முதல்வா் கே. சேகா், குரோத் அகாதெமியின் தலைமைப் பயிற்சியாளா் வி.எஸ்.பி.கவிதா, துணை முதல்வா் ஆா். பிரியா உள்ளிட்டோா் செய்தனா். பள்ளியின் முதன்மை முதல்வா் சொ. ராமசுப்ரமணியன் வரவேற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com