சின்னதாராபுரத்தில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி

சின்னதாராபுரத்தில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அரவக்குறிச்சி: சின்னதாராபுரத்தில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கரூரிலிருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில் அதிக வாகனங்கள் சென்று வருகின்றன. சின்னதாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடை வளா்ப்போா் தங்கள் வீட்டிலேயே முழுமையாக கால்நடைகளுக்கு தீவனம் கொடுக்காமல் சாலைகளில் அவிழ்த்து விடுவதால் கால்நடைகள் சாலைகளில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனா்.

எனவே, சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com