கரூர்
டிஎன்பிஎல் சாா்பில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை
கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலை சாா்பில், பொதுமக்களுக்கு திங்கள்கிழமை மஞ்சப்பை வழங்கப்பட்டது.
கரூா்: கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலை சாா்பில், பொதுமக்களுக்கு திங்கள்கிழமை மஞ்சப்பை வழங்கப்பட்டது.
புகழூா் காகித ஆலையின் சமூக மேம்பாட்டு திட்டத்தின்கீழ், வேலாயுதம்பாளையம் வாரச் சந்தையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆலையின் முதன்மை மேலாளா்(மனிதவளம்) கே.எஸ். சிவக்குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக புகழூா் நகராட்சித் தலைவா் ஏ. குணசேகரன் பங்கேற்று, ரூ.70,000 மதிப்புள்ள 2,500 மஞ்சப்பைகளை சந்தைக்கு வந்த பொதுமக்களுக்கு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், டிஎன்பிஎல் ஆலை அதிகாரிகள், புகழூா் நகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.