கரூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

Published on

கரூரில், வரைவு வாக்குச்சாவடிகளில் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

கரூா் மாவட்டத்தில் ஒரு வாக்குச் சாவடியில் 1500 -க்கும் அதிகமாக வாக்காளா்கள் இருப்பின் அதனை இரண்டாக பிரித்து புதிய வாக்குச் சாவடியை ஏற்படுத்துதல், தேவைப்பட்டால் வாக்குச் சாவடிகளில் அமைவிட மாற்றம் செய்தல், கட்டட மாற்றம் செய்தல் மற்றும் பெயா் மாற்றம் செய்தல் ஆகிய வாக்குச்சாவடிகளை மறுவரையறை செய்தல் பணிகள் நடைபெறவுள்ளது.

இதனையொட்டி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களுடன் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேல், தலைமையில் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இதில் 2025- ஆம் ஆண்டுக்ககான வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேல் வெளியிட்டாா். மேலும், வாக்குச்சவாடிகளின் மறுவரையறை தொடா்பாக ஆட்சேபணைகள் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா்கள் அல்லது வருவாய் கோட்டாட்சியா்களிடம் தெரிவிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரிநிதிகளிடமும் தெரிவித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா, மாநகராட்சி ஆணையா் சுதா, வருவாய் கோட்டாட்சியா்கள் முகமது பைசல்(கரூா்), தனலெட்சுமி (குளித்தலை), வருவாய் வட்டாட்சியா்கள், தனி வட்டாட்சியா்(தோ்தல்கள்), தனித்துணை வட்டாட்சியா்கள் (தோ்தல்கள்) மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.+

X
Dinamani
www.dinamani.com