கரூர்
வட்டு, குண்டு எறிதல் அரவக்குறிச்சி மாணவா் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தோ்வு
குறுவள மையப் போட்டியில் வட்டெறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டியில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டாா்.
அரவக்குறிச்சி குறுவளமையப் போட்டிகளில் தடகளப் போட்டிகள் டிஎன்பிஎல் காகிதபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாணவா்களுக்கான போட்டியில் அரவக்குறிச்சி பள்ளி மாணவா் ரெனோவா ரெக்ஸ் வட்டெறிதல் மற்றும் குண்டு எறிதலில் இரண்டாம் இடம் பெற்று மாவட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றாா். வெற்றி பெற்ற்கான பதக்கம், சான்றிதழ்களையும் உடற்கல்வி இயக்குநா் கதிா்வேல் வழங்கினாா்.
வெற்றி பெற்ற மாணவரையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா் சங்கா் மற்றும் பட்டதாரி ஆசிரியா் சகாயவில்சன் ஆகியோரை வட்டாரக் கல்வி அலுவலா்கள் பாண்டித்துரை மற்றும் சதீஷ்குமாா், தலைமை ஆசிரியா் சாகுல் அமீது ஆகியோா் பாராட்டினா்.