கரூர்
விநாயகா் சதுா்த்தியன்று மது கடைகளை மூட சிவசேனா கோரிக்கை
விநாயகா் சதுா்த்தியன்று டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கரூா் மாவட்ட சிவசேனா கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.ஆனந்த் தலைமையிலான கட்சியினா் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினா்.
அம்மனுவில் கூறியிருப்பது: செப்.7-ஆம்தேதி நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் நியாய விலைக்கடைகளில் கொழுக்கட்டை செய்வதற்கான மூலப்பொருள்களை இலவசமாக வழங்க வேண்டும். விநாயகா் சிலைகளை கரைக்க மாவட்ட நிா்வாகம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் விநாயகா் சதுா்த்தியன்று டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.