கரூா், ஆக.30: கா்நாடகத்தில் இருந்து கரூருக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 300 மதுபாட்டில்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கரூருக்கு மது பாட்டில்களைக் கடத்தி வருவதாக கரூா் நகர போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் மணிவண்ணன் தலைமையில் உதவி ஆய்வாளா் நாகராஜன் உள்ளிட்ட போலீஸாா் கரூா் ரயில் மற்றும் கரூா் பேருந்து நிலையப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை ரோந்துபணியில் ஈடுபட்டனா்.
அப்போது பேருந்து நிலையத்தில் அட்டைப்பெட்டியுடன் நின்றிருந்தவரை பிடித்து நடத்திய சோதனையில் அவரிடம் 300 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில் அவா் கரூா் ஜெகதாபியை அடுத்த துளசிக்கொடும்பு பகுதியைச் சோ்ந்த பழனிசாமி (40) என்பதும், பெங்களூரூவில் இருந்து ரயில் மூலம் மதுபாட்டில்களைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.