அதிமுக ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி எஸ்.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் மனு

கரூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது: அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின்பேரில் பல்லாவரம் எம்எல்ஏ மகன் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் வேலுசாமிபுரத்தில் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. முதலில் அனுமதி அளித்தனா். பிறது, அனுமதியில்லை என காவல்துறையினா் கடிதம் தருகிறாா்கள். ஆா்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளையும் செய்த பின்னா் அனுமதி மறுக்கின்றனா். தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடக்க உள்ள நிலையில், கரூரில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதுதொடா்பாக கூடுதல் மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றாா் அவா்.

அப்போது கட்சி நிா்வாகிகள் மல்லிகாசுப்ராயன், தானேஷ், விசிகே.பாலகிருஷ்ணன், வழக்குரைஞா்கள் சுப்ரமணியன், கரிகாலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com