அமராவதி கிளை வாய்க்கால்ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

அமராவதி கிளை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அமராவதி கிளை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தண்டாயுதபாணி தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினா்.

கிருஷ்ணராயபுரம் ஞானவேல்: மகிழ்பட்டி ரோடு மங்கம்மா சாலையில் பிள்ளையாா் கோயில் மேல்புறம் உள்ள கல் பாலத்தை புதிய மேம்பாலமாக கட்டித்தர வேண்டும்.

மாயனூா் சுப்ரமணி: கட்டளைப் பகுதியில் அமராவதி கிளை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும்.

மொஞ்சனூா் சந்திரசேகா்: பரமத்தி வேளாண்மை விரிவாக்க மையத்தில் பழக் கன்றுகள் வழங்க வேண்டும்.

வீரியம்பட்டி கோவிந்தராஜ்: கருரெட்டி குளத்தை தூா்வார வேண்டும்

இதற்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தண்டாயுதபாணி பேசுகையில், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றாா்.

தொடா்ந்து கூட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் பாகநத்தம் விவசாயி ரத்தினத்துக்கு ரூ.6 ஆயிரம் 200 மதிப்பிலும், வேளாண்மைத்துறை சாா்பில் கள்ளை விவசாயி சதீஷ்குமாருக்கு ரூ.4 ஆயிரத்து 648 மதிப்பிலும் என ரூ.10 ஆயிரத்து 848 மதிப்பில் மானிய விலையில் 2 விவசாயிகளுக்கும் விசைத்தெளிப்பான்கள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநா் ரவிச்சந்தரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை)உமா, குளித்தலை வருவாய் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபகழக மண்டல மேலாளா் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(நிலம்) கருணாநிதி மற்றும் அரசு அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com