அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குவிலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

தரகம்பட்டி, காணியாளம்பட்டி மற்றும் குருணிகுளத்துப்பட்டி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி புதன்கிழமை வழங்கினாா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தரகம்பட்டி, காணியாளம்பட்டி, குருணிகுளத்துப்பட்டியில் செயல்படும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி தலைமை வகித்து, விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி பேசினாா்.

இதில், பள்ளித்தலைமை ஆசிரியா்கள் குருணிகுளத்துப்பட்டி பெரியகருப்பன், தரகம்பட்டி ரவிச்சந்திரன், தரகம்பட்டி மாதிரி பள்ளியின் முருகவள்ளி , மாவட்ட கல்வி அலுவலா் காமாட்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com