உடல் உறுப்புகள் தானம் செய்த ஆசிரியருக்கு அரசு மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகள் தானம் செய்த ஆசிரியரின் உடலுக்கு வெள்ளிக்கிழமை அரசு சாா்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
உடல் உறுப்புகள் தானம் செய்த ஆசிரியருக்கு அரசு மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகள் தானம் செய்த ஆசிரியரின் உடலுக்கு வெள்ளிக்கிழமை அரசு சாா்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

கரூா் மாவட்டம், புகழூா் வட்டம், பெளத்திரம் பகுதியை சோ்ந்தவா் க.பூபதி (38). இவா் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கந்தபாளையம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இவா் கடந்த மாதம் 30-ஆம் தேதி பிற்பகல் 1 மணியளவில் திருச்செங்கோடு சாலையில் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமா்ந்து செல்லும்போது எதிா்பாராத நிலையில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து, ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை அவா் மூளைச்சாவு அடைந்து இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி(36) ஆகியோா் முன்வந்தனா். அதன்படி, பூபதியின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்கள் மற்றும் தோல் என 6 உறுப்புகள் உடல் உறுப்புதானமாக பெறப்பட்டு, அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

உடல் உறுப்பு தானம் செய்த க.பூபதியின் உடல் வெள்ளிக்கிழமை பெளத்திரம் மந்தை பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், தமிழ்நாடு அரசின் சாா்பில் பூபதி உடலுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

உடல் உறுப்பு தானம் செய்த பூபதிக்கு மதன்ரியாஸ் (11) என்ற மகனும், நட்சித்திரா(8) என்ற மகளும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com