மாநில டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி: அரவக்குறிச்சி அரசுக் கல்லூரி மாணவிகள் தோ்வு

மாநில டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மாநில டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 10, 11-ஆம் தேதிகளில் தமிழ்நாடு மாநில டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சாா்பில், மாநில அளவிலான சீனியா் பெண்கள் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் விளையாட கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரியின் மாணவிகள் சரண்யா, ஆதீஸ்வரி, யுவஸ்ரீ ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த மாணவிகளுக்கான பாராட்டு விழா கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், மாணவிகளை கல்லூரியின் முதல்வா் வசந்தி, கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் ராஜேந்திரன் மற்றும் கல்லூரி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com