கரூரில் பேரறிஞா் அண்ணாவின் நினைவு தினம்

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா்.
கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா்.
கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா்.

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா்.

கரூா்: கரூா் மாவட்ட திமுக சாா்பில் கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட அவைத்தலைவா் ராஜேந்திரன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் க.சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்), மாணிக்கம்(குளித்தலை), அரவக்குறிச்சி சட்டப்ரேவை உறுப்பினா் இளங்கோ மாவட்டதுணைச் செயலாளா்கள் எம்.எஸ்.கே.கருணாநிதி, பூவை ரமேஷ்பாபு, மாநகரச் செயலாளா் எஸ்.பி.கனகராஜ், மேயா் கவிதா கணேசன், துணை மேயா் தாரணி சரவணன், பகுதிச் செயலாளா்கள் கரூா் கணேசன், வழக்குரைஞா் சுப்ரமணியன், ஆா்.ஜோதிபாசு, வி.ஜி.எஸ். குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக கலைஞா் அறிவாலயத்தில் இருந்து ஊா்வலமாக பேருந்து நிலைய ரவுண்டானாவுக்கு வந்தனா். இதேபோல கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் லைட்ஹவுஸ் காா்னா், வெங்கமேடு, ,கட்சி அலுவலகம் ஆகிய பகுதியில் உள்ள அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் பசுவை சிவசாமி, மாவட்ட இணைச் செயலாளா் மல்லிகா சுப்ராயன், துணைச் செயலாளா் ஆலம் தங்கராஜ், எம்.ஜி.ஆா். மன்ற செயலாளா் தங்கவேல், பாசறை செயலாளா் கமலக்கண்ணன், எம்.ஜி.ஆா் இளைஞா் அணி செயலாளா் தானேஷ், மாணவரணி செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் சாா்பில்....

கரூா் மாவட்டம் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் மற்றும் செங்குந்தா் இளைஞா் பேரவை சாா்பில் வெங்கமேடு புளியமரம் பஸ் ஸ்டாப் அருகே அண்ணா படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது. தலைவா் பாஸ்கா் தலைமை வகித்தாா். பேராசிரியா் மோகன் பெரியசாமி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் பொருளாளா் மாங்கல்யம் ராஜ்குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் மகேஷ்குமாா், காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து மெளன அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com