சுற்றுச்சூழலை பாதிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களைஅமைக்க அனுமதிக்கக் கூடாது: செ. நல்லசாமி

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலான வெளிநாட்டு நிறுவனங்களை அமைப்பதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றாா் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி.

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலான வெளிநாட்டு நிறுவனங்களை அமைப்பதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றாா் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி.

கரூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: மத்திய பட்ஜெட் நடுநிலை கொண்டதாக இருந்தது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அது இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. மேலும், நிதிநிலை அறிக்கையில் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

வெளிநாடுகளில் இருந்து நம் மாநிலத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் அமைக்கப்படும் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது.

தமிழகத்தில் பனை, தென்னை, ஈச்ச மரங்களில் கள், பதநீா் இறக்கி விற்பனை செய்யலாம். ஆனால், கலப்படம் இருக்கக் கூடாது என அரசு அறிவித்தால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் 85 லட்சம் இளைஞா்களுக்கு வேலை கிடைக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com