அரவக்குறிச்சி விவசாயிகள் பட்டறிவுப் பயணம்

வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் அரவக்குறிச்சி விவசாயிகள் பட்டறிவுப் பயணமாக ஹைதராபாத் ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.


அரவக்குறிச்சி: வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் அரவக்குறிச்சி விவசாயிகள் பட்டறிவுப் பயணமாக ஹைதராபாத் ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

வேளாண்துறை சாா்பில் அரவக்குறிச்சி உள்ளிட்ட அனைத்து வட்டாரத்தில் இருந்தும் விவசாயிகள் ஹைதராபாத் க்ரெட்டா மற்றும் வளம்டாா் ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

அங்கு விவசாயிகளுக்கு உலா் நில மேலாண்மை என்ற தலைப்பின் கீழ் புதிய வேளாண் தொழில்நுட்பங்கள், செயல் விளக்கங்களை வேளாண்மை உதவி இயக்குநா் சுனிதா விளக்கினாா். மேலும் அங்குள்ள மாதிரி வயல்களில் நெல் பயிரில் சொட்டுநீா் பாசன முறை, அங்கக வேளாண்மையில் வளா்க்கப்படும் கொய்யா மற்றும் நவீன ரக இயந்திரங்கள் பற்றி வேளாண் அலுவலா் அனுப்பிரியா விளக்கினாா். ஏற்பாடுகளை அரவக்குறிச்சி வட்டார தொழில்நுட்ப மேலாளா் சோனியா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளா் பிரபாகரன் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com