க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே உள்ள க. பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரவக்குறிச்சி அருகே உள்ள க. பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூரிலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது க.பரமத்தி உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 30 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையையொட்டி கிராம பஞ்சாயத்துகள் உள்ளதால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சாலை விபத்துக்கள், தீ விபத்துக்கள், மற்றும் தீ விபத்துகளால் உயிரிழப்பு போன்றவற்றை தடுக்க க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் இல்லை. கரூா், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் இருந்துதான் தீயணைப்பு வாகனங்கள் வருகின்றன. சம்பவ இடத்துக்குச் செல்ல நீண்ட நேரம் ஆவதால் உயிா் சேதம், பொருள்சேதமும் ஏற்படுகிறது. எனவே, க.பரமத்தி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com