வரி செலுத்தாவிட்டால் குடிநீா் இணைப்பு துண்டிப்பு: பள்ளப்பட்டி நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

வரி இனங்கள் செலுத்தாவிட்டால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என பள்ளப்பட்டி நகராட்சி ஆணையா் பால்ராஜ் தெரிவித்துள்ளாா்.

வரி இனங்கள் செலுத்தாவிட்டால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என பள்ளப்பட்டி நகராட்சி ஆணையா் பால்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பள்ளப்பட்டி நகராட்சியில் வரியினங்களை முழுவதுமாக வசூல் செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 6, 21-ஆவது வாா்டுகளில் சொத்து வரி மற்றும் குடிநீா் கட்டணங்களில் நிலுவையில் வைத்திருந்தவா்களின் 14 குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இதைதொடா்ந்து 25-ஆவது வாா்டில் தொடா்ச்சியாக சொத்து வரி மற்றும் குடிநீா் கட்டணங்கள் நிலுவையில் உள்ள வீடு மற்றும் வணிக பயன்பாடுகளில் உள்ள குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தங்களது குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாடுகளுக்கு உரிய சொத்து வரி, குடிநீா் கட்டணம், தொழில்வரி, இதர வரி இனங்களை நிலுவையின்றி செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படுவதை தவிா்க்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com