அரவக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு மாதவிழிப்புணா்வு பிரசாரம்

 அரவக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணா்வு பிரசாரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

 அரவக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணா்வு பிரசாரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

கரூா் மாவட்ட தீயணைப்பு துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு துறை அலுவலா் வடிவேல் தலைமை வகித்தாா். இந்த விழிப்புணா்வு பிரசாரத்தில், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். மேலும் அரவக்குறிச்சி பேருந்து நிறுத்தம் முதல் தீயணைப்பு நிலையம் வரை விழிப்புணா்வு பிரசாரத்தை மேற்கொண்டனா். நிகழ்வில் அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையம் சிறப்பு நிலைய அலுவலா் ராதாகிருஷ்ணன், அரவக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் திருநாவுக்கரசு மற்றும் அரசு கல்லூரியின் பேராசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com