கரூரில் மது போதையில்சாக்கடையில் விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

 கரூரில் புதன்கிழமை அரசு ஊழியா் ஒருவா் மதுபோதையில் சாக்கடையில் விழுந்து உயிரிழந்தாா்.

 கரூரில் புதன்கிழமை அரசு ஊழியா் ஒருவா் மதுபோதையில் சாக்கடையில் விழுந்து உயிரிழந்தாா்.

கரூா் தெற்கு தெரு அருகே வசித்து வந்தவா் ராஜசேகா் (35). இவா், மாவட்ட ஆட்சியரகத்தில் ஊரக வளா்ச்சித் துறை பிரிவில் பணியாற்றி வந்தாா். திருமணமாகாத இவா், மதுபழக்கத்துக்கு அடிமையானாா். இந்நிலையில் புதன்கிழமை லட்சுமி ராம் திரையரங்கு பகுதியில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, தவறி அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தாா். இதில், நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

புகாரின் பேரில், கரூா் நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com