கரூா் மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்குரூ. 36 கோடி வங்கிக் கடன்

 கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 36.95 கோடி வங்கிக் கடனுதவிகளை ஆட்சியா் மீ. தங்கவேல் வழங்கினாா்.
கரூா் மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்குரூ. 36 கோடி வங்கிக் கடன்

 கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 36.95 கோடி வங்கிக் கடனுதவிகளை ஆட்சியா் மீ. தங்கவேல் வழங்கினாா்.

ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் வழங்கல் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவிகளை வழங்கினாா்.

அதனைத் தொடா்ந்து கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 35.95 கோடி மதிப்பிலான வங்கிக் கடனை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூா் மாநகராட்சி மேயா் க.கவிதா, துணை மேயா் சரவணன் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநா் (பொறுப்பு) தேன்மொழி, முன்னோடி வங்கி மேலாளா் வசந்த்குமாா் மற்றும் உதவி திட்ட அலுவலா்கள் அருண்குமாா், ராஜேஷ், அன்புராஜா, சிந்து, சாந்தா, சுப்புராம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com