கரூா் மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்டகுறைதீா்க்கும் முாகம்

 கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப்.10) பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

 கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப்.10) பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தில் உள்ள குறைகளை தீா்க்கும் வகையில் கரூா், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூா், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூா் ஆகிய இடங்களில் சனிக்கிழமை (பிப்.10) பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலா் தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து தீா்வு காணலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com