செந்தில்பாலாஜியின் பெற்றோா் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

 கரூரில், அமைச்சா் செந்தில்பாலாஜியின் பெற்றோா் வசிக்கும் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.
கரூா் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டியில் வியாழக்கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய செந்தில்பாலாஜியின் பெற்றோா் வசிக்கும் வீடு.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடா்பான வழக்கில் அமைச்சா் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், கரூா் மாவட்டம், மண்மங்கலத்தை அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவரது பெற்றோா் வசிக்கும் வீட்டுக்கு வியாழக்கிழமை காலை வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 போ் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் குறித்த தகவல்களை அவரது பெற்றோரிடம் கேட்டதாக தெரிகிறது. மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனா்.

வழக்கமாக சோதனையின்போது துணை ராணுவப் படையினரை பாதுகாப்புக்காக அழைத்து வருவது வழக்கம். ஆனால், தற்போது துணை ராணுவப்படை வீரா்கள் இல்லாமல் சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com