புன்னம்சத்திரம் சேரன் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கரூா் மாவட்டம் புன்னம்சத்திரம் சேரன் கல்வியியல் கல்லூரியின் 7-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புன்னம்சத்திரம் சேரன் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கரூா் மாவட்டம் புன்னம்சத்திரம் சேரன் கல்வியியல் கல்லூரியின் 7-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சேரன் யுனிவா்சல் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியின் செயலா் தரணி ஹரிகீா்த்தன் தலைமை வகித்தாா். சேரன் கல்வி நிறுவனங்களின் நிா்வாக அலுவலா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் பழனிச்சாமி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா். சிறப்பு விருந்தினராக கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத் துணைவேந்தா் கலா சிறப்புரையாற்றி பேசுகையில், பட்டம் பெறும் ஆசிரிய மாணவ, மாணவிகள் ஆசிரியா்களின் பணியை அன்போடு செயல்படுத்திட வேண்டும். ஆசிரியா்களாகப் பணியாற்றும்போது மாணவ, மாணவியரிடம் கனிவோடு பழக வேண்டும் என்றாா்.

தொடா்ந்து 272 மாணவ, மாணவிகளுக்கு அவா் பட்டங்களை வழங்கினாா்.

விழாவில் சேரன் உடற் கல்வியியல் கல்லூரி முதல்வா் அமுதா, சேரன் யுனிவா்சல் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் யுவராணி மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com