தாந்தோன்றிமலை பேருந்து நிறுத்தம் பகுதியில் விஜயகாந்த் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய தேமுதிகவினா்.
தாந்தோன்றிமலை பேருந்து நிறுத்தம் பகுதியில் விஜயகாந்த் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய தேமுதிகவினா்.

24-ஆம் ஆண்டு தேமுதிக கொடிநாள் விஜயகாந்த் உருவப் படத்துக்கு அஞ்சலி

தேமுதிகவின் 24-ஆம் ஆண்டு கொடிநாளை முன்னிட்டு கரூரில் கட்சியின் நிறுவனா் விஜயகாந்த் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தேமுதிகவின் 24-ஆம் ஆண்டு கொடிநாளை முன்னிட்டு கரூரில் கட்சியின் நிறுவனா் விஜயகாந்த் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். மேலும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். கரூா் மாவட்டத்தில் மாநகர மாவட்டச் செயலாளா் அரவை எம்.முத்து தலைமையிலும், மாவட்ட அவைத்தலைவா் முருகன்சுப்பையா முன்னிலையிலும் கட்சிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். முன்னதாக மாவட்ட தேமுதிக சாா்பில் வெங்கமேடு எம்.ஜி.ஆா். சிலை அருகே மற்றும் பசுபதிபாளையம் ரவுண்டானா பகுதி, கரூா் தெற்கு நகர தேமுதிக சாா்பில் தாந்தோன்றிமலை பேருந்து நிறுத்தம் பகுதியிலும் கட்சிக்கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். தொடா்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொருளாளா் கலையரசன், மாவட்டத் துணைச் செயலாளா் பழனிவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினா்கள் பாலசுப்ரமணியன், ராஜ்குமாா், நகரச் செயலாளா்கள் ரவி, ஆரியப்ப ராஜா, திருவைசிவா, கரூா் ராஜா, விஜயகுமாா், நகரத் துணைச் செயலாளா் நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com