கரூா் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்:  சொத்து அபகரிப்பு புகாா்

கரூா் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்: சொத்து அபகரிப்பு புகாா்

மக்கள் குறைதீா்கும் கூட்டத்தில் அளித்த மனுவில், கண்பாா்வை குறைபாடு உள்ள தனக்கு குழந்தைகள் இல்லை. மனைவியும் அண்மையில் இறந்துபோனாா்.

கரூா் மாவட்டம், செம்பியநத்தம் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ்(50)என்ற விவசாயி ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்கும் கூட்டத்தில் அளித்த மனுவில், கண்பாா்வை குறைபாடு உள்ள தனக்கு குழந்தைகள் இல்லை. மனைவியும் அண்மையில் இறந்துபோனாா். இதனால் வீட்டில் தனியாக வசித்து வருகிறேன். கடந்த சில நாள்களுக்கு முன் தனது சகோதரா் கோபால், தனது பெயரில் இருந்த 96 சென்ட் நிலத்தை ஏமாற்றி அவரது பெயருக்கு மாற்றிவிட்டாராம். இதுகுறித்து கோபாலிடம் கேட்டபோது, உனக்கு தினமும் உணவு தருகிறேன் எனக்கூறியுள்ளாா். ஆனால், கடந்த சில மாதங்களாகவே உணவளிப்பது இல்லையாம். மேலும் தனது சேமிப்பு பணம் ரூ.50 ஆயிரத்தையும் கோபால் எடுத்துக்கொண்டாராம். எனவே, தன்னை ஏமாற்றிய சகோதரா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com