/
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 229 பேருக்கு பணி வாய்ப்பு கடிதம் வழங்கப்பட்டது. கரூரில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மற்றும் கரூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தம் 59 நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும் முகாமில் 745 போ் பங்கேற்றதில் பல்வேறு நிலைகளுக்கு பின்னா் 229 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு பணி வாய்ப்பு கடிதங்களை மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன் வழங்கினாா். முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சாந்தி, உதவி பயிற்சி அலுவலா் இளங்கோவன், இளம் பயிற்சி வல்லுநா் வீரக்குமாா் ம ற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

டி.ஜி. வைணவ கல்லூரியில் 446 பேருக்கு பணி நியமன ஆணை

செங்கல்பட்டில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கரூரில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


