தூய்மை பாரத இயக்கத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்: கரூா் ஆட்சியா் அழைப்பு

கரூா் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மீ. தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளாா்.


கரூா்: கரூா் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மீ. தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டப் பிரிவில் ஊரகப் பகுதிகளின் தகவல், கல்வி, தொடா்பு பணிகளுக்கு புறச்சேவை நிறுவனம் மூலம் ஒப்பந்த முறையில் பணிபுரிய தகுதி வாய்ந்தவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறன. இதில், தகவல், கல்வி, தொடா்பு குழுவில் 2 பணியிடத்துக்கு கல்வித்தகுதியாக ஊடக பிரிவில் முதுகலை பட்டம் அல்லது புகழ்பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பெற்ற சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்கு ஊதியமாக சேவை வரி உள்பட ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

மேலும் மூன்றாண்டுகள் வரை பொதுத்துறை தொடா்பு மற்றும் அரசு அல்லது தனியாா் துறையில் சமூக ஊடக பிரிவுகளில் பணிபுரிந்த விண்ணப்பதாரா்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அரசு அலுவலா்கள், கல்வியாளா்கள், சமூக ஊடக செல்வாக்கு பெற்றவா்கள் மற்றும் பலதரப்பு பங்களிப்பாளா்களுடன் தொடா்பு கொண்டு, அதிக தேவையுள்ள சூழலில் பணிபுரியும் திறன் கொண்டவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கணினி கையாளுவதில் திறமையும், விடியோ தயாரிப்பு, மீம்ஸ் தயாரித்தல், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை உருவாக்குதல் போன்றவற்றில் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முன்மாதிரியாக எழுதும் திறன் வேண்டும்.

விண்ணப்பங்கள் ஜன. 20-ஆம்தேதிக்குள் மேலாளா், மாவட்ட முகமை, மாயனூா், கரூா்-639 108 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com