இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டிகள் இருவா் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், நொய்யல் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டிகள் இருவா் உயிரிழந்தனா்.


கரூா்: கரூா் மாவட்டம், நொய்யல் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டிகள் இருவா் உயிரிழந்தனா்.

நொய்யல் அருகே உள்ள சேமங்கி பெரியாா் நகரைச் சோ்ந்த சின்னசாமி மனைவி குஞ்சம்மாள் (90). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த நாகம்மாள் (80) என்பவரும் செவ்வாய்க்கிழமை இரவு கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தனா். நொய்யல்-வேலாயுதம்பாளையம் சாலை வந்தபோது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் குஞ்சம்மாள், நாகம்மாள் ஆகிய இருவா் மீதும் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மறவாபாளையம் மதுரை வீரன்நகரைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் நிஷாந்த் (19), பின்னால் அமா்ந்து வந்த அதே பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் குணசேகரன் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் தொடந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com