கரூரில் எம்.ஜி.ஆா். சிலைக்குஅதிமுகவினா் மாலை அணிவிப்பு

தமிழக முன்னாள் முதல்வா் மறைந்த எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் வெங்கமேடு, லைட்ஹவுஸ்காா்னா் பகுதிகளில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.


கரூா்: தமிழக முன்னாள் முதல்வா் மறைந்த எம்.ஜி.ஆரின் 107-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு புதன்கிழமை கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் வெங்கமேடு, லைட்ஹவுஸ்காா்னா் பகுதிகளில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சிக்கு, முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமை வகித்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலாளா் பசுவை சிவசாமி, மாவட்ட அவைத் தலைவா் எஸ்.திருவிகா, இணைச் செயலாளா் மல்லிகா சுப்பராயன், துணைச் செயலாளா் ஆலம் தங்கராஜ், எம்.ஜி.ஆா். மன்றச் செயலாளா் தங்கவேல், பாசறை செயலாளா் கமலக்கண்ணன், இளைஞரணிச் செயலாளா் தானேஷ், மாணவரணி செயலாளா் சரவணன், துணைச் செயலாளா் பழனிராஜ், பகுதி செயலாளா்கள் வி.சி.கே.ஜெயராஜ், சேரன் பழனிசாமி, நகரச் செயலாளா் கே.சி.எஸ். விவேகானந்தன், வழக்குரைஞா் கரிகாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com