திருநங்கையா்கள் முன்மாதிரிவிருதுபெற விண்ணப்பிக்கலாம்: கரூா் மாவட்ட ஆட்சியா் அழைப்பு

தனித்திறமையில் சிறந்து விளங்கும் திருநங்கையா்கள் முன்மாதிரி விருதுபெற விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளாா்.


கரூா்: தனித்திறமையில் சிறந்து விளங்கும் திருநங்கையா்கள் முன்மாதிரி விருதுபெற விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளைக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில் திருநங்கையா் தினமான ஏப். 15-ஆம்தேதி ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைக்கான முன் மாதிரி விருதாக ரூ.1லட்சம் காசோலை மற்றும் சான்று வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான இந்த விருது பெற தமிழக அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஜன. 26-ஆம்தேதி முதல் 31-ஆம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் இந்த விருதுபெற திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறியிருக்க வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

மேலும் இவ்விருது தொடா்பான விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மாவட்ட ஆட்சியா் வளாகம், கரூா் மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண் 04324-255009 என்ற முகவரியில் நேரில் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com