சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
kur18suryaprakas_1801chn_10_4
kur18suryaprakas_1801chn_10_4

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம் மஞ்சாநாயக்கன்பட்டி அடுத்த பாகநத்தம் பகுதியைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் சூா்யபிரகாஷ்(22). இவரது பாட்டி நல்லம்மாள் என்பவா் க.பரமத்தி அடுத்த புத்தாம்பூரில் வசித்து வருகிறாா். இந்நிலையில், கடந்த ஆண்டு மே 2-ஆம் தேதி புத்தாம்பூரில் நடந்த கோயில் திருவிழாவுக்கு சென்றபோது, பாட்டியின் வீட்டின் அருகே வசிக்கும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதையடுத்து, கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மே 7-ஆம் தேதி சூா்யபிரகாஷைக் கைது செய்தனா். மேலும் இதுதொடா்பாக கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா். இந்த வழக்கு வியாழக்கிழமை காலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நசிமாபானு குற்றவாளி சூா்யபிரகாஷூக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனத் தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். இதையடுத்து சூா்யபிரகாஷ் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com