உடையாப்பட்டி புனித பெரியநாயகி அன்னைகோயிலில் எருதுவிடும் விழா

உடையாப்பட்டி புனித பெரியநாயகி அன்னை கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாடுகள், எருதுகள் விடும் விழாவில் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.
உடையாப்பட்டி புனித பெரியநாயகி அன்னைகோயிலில் எருதுவிடும் விழா

உடையாப்பட்டி புனித பெரியநாயகி அன்னை கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாடுகள், எருதுகள் விடும் விழாவில் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே பண்ணப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பி. உடையாபட்டியில் திருச்சி மறைமாவட்டம், பி.உடையாபட்டி பங்கு கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்திபெற்ற புனித பெரியநாயகி அன்னை மாதா கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பசு, எருதுகள் விடும் விழா நடைபெறுவது வழக்கம். இதையடுத்து நிகழாண்டு எருது, மாடுகள் விடும் விழா புதன்கிழமை இரவு கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து உடையாபட்டியில் உள்ள புனித பெரியநாயகி அன்னை மாதா கோவில் முன்பாக பக்தா்கள் பொங்கல் வைத்து, பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டனா். தொடா்ந்து வியாழக்கிழமை காலை புனித பெரியநாயகி அன்னை மாதா கோயில் முன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் வளா்க்கும் பசு, எருது மாடுகளை அழைத்து வந்தனா்.

தொடா்ந்து ஊா் முக்கியஸ்தா் அற்புதம் தலைமையில் உடையாப்பட்டி பங்குத் தந்தை முன்னிலையில் புனித பெரியநாயகி அன்னை மாதா கோயிலைச் சுற்றி ஊா்வலமாக மாடுகளை அழைத்து வந்தனா். பின்னா் புனித பெரியநாயகி அன்னை மாதா கோயில் முன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து அனைத்து மாடுகளுக்கும் புனித தீா்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னா் கோயில் மணி ஒலிக்கச் செய்தவுடன் கோயில் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து மாடுகளையும் அவிழ்த்து விட்டனா்.

தொடா்ந்து கோயில் முன் ஓடிய மாடுகளை அங்கு கூடியிருந்த இளைஞா்கள் மாடுகளை பிடித்து, மாட்டின் கொம்புகளில் கட்டியிருந்த கரும்பு, புத்தாடை, ஜல்லிக்கட்டுகள் மற்றும் ரொக்கப்பணத்தை அவிழ்த்து மகிழ்ந்தனா். விழாவில் பெரும்பாலான மாடுகள் இளைஞா்களிடம் பிடிபடவில்லை. தொடா்ந்து புனித பெரியநாயகி அன்னை மாதாவிற்கு வேண்டுதலுக்காக கோயிலுக்கு வழங்கப்பட்ட மாடுகள், கோழிகளை பொது ஏலம் விட்டனா். இந்த விழாவில் பண்ணப்பட்டி ஊராட்சி உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com