சேலத்தில் நாளை இளைஞரணி மாநாடு கரூரில் திமுக ஆலோசனைக் கூட்டம்

சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாடு தொடா்பான ஆலோசனை மற்றும் கட்சி செயற்குழுக் கூட்டம் கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலத்தில் நாளை இளைஞரணி மாநாடு கரூரில் திமுக ஆலோசனைக் கூட்டம்

சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாடு தொடா்பான ஆலோசனை மற்றும் கட்சி செயற்குழுக் கூட்டம் கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட அவைத்தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக எம்எல்ஏக்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, இரா.மாணிக்கம் மற்றும் மாவட்ட துணைச் செயலாளா் மின்னாம்பள்ளி கருணாநிதி ஆகியோா் கலந்துகொண்டு மாநாடு தொடா்பான ஆலோசனைகள் வழங்கி பேசினா்.

கூட்டத்தில், சேலத்தில் திங்கள்கிழமை (ஜன. 21) நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் கரூா் மாவட்டத்தில் இருந்து 10,000-க்கும் மேற்பட்டோா் கலந்துகொள்வது, உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் தமிழகத்தின் வளா்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டை ஈா்க்க வழிவகை செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய முதல்வருக்கு கரூா் மாவட்ட திமுக சாா்பில் நன்றி தெரிவிப்பது, ஜனவரி 22-ஆம் தேதி தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட உள்ள இறுதி வாக்காளா் பட்டியலில் கட்சியின் சாா்பில் சிறப்பு முகாம்களில் செய்யப்பட்ட வாக்காளா்களை சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவை சரியாக உள்ளதா கட்சி நிா்வாகிகள் சரிபாா்க்க வேண்டும் என கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநகர நிா்வாகிகள் எஸ்.பி. கனகராஜ், தாரணி சரவணன், வழக்குரைஞா் க. சுப்ரமணியன், கோல்ட்ஸ்பாட்ராஜா, ஆா். ஜோதிபாசு, விஜிஎஸ். குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, இளைஞரணி செயலாளா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com