kur19malaimankovil_1901chn_10_4
kur19malaimankovil_1901chn_10_4

மாலைமேடு மாலையம்மன் கோயில் திருவிழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே மாலை மேடு மாலையம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே மாலை மேடு மாலையம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தோகைமலை அருகே கள்ளை ஊராட்சிக்குட்பட்ட மாலைமேடு கிராமத்தில் பெத்தகாப்பு கரை, பொதிகாப்பு கரை, பூசாரி கரை, தலையாரி கரை, கோடங்கி கரை, கம்புளி கரை, தாசிரி கரை ஆகிய 7 கரைகாரா்களுக்கு பாத்தியப்பட்ட சுமாா் 500 ஆண்டுகள் பழைமையான மாலையம்மன் கோயில் உள்ளது.

நவாப் ஆட்சி காலம் முதல் ஒரே அத்திமரத்தில் பல்வேறு சிலைகளை வடிவமைத்து வழிபாட்டினை இப்பகுதி மக்கள் செய்து வருகிறாா்கள். இந்தச் சுவாமிக்கு ஆண்டுதோறும் தை மாதம் 4-ஆம் தேதி குடிபாட்டுக்காரா்கள் திருவிழா நடத்தி வருகின்றனா்.

நிகழாண்டுக்கான திருவிழா வெள்ளிக்கிழமை கோயில் அறங்காவலா் குழு தலைவா் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கூடலூா் ஊராட்சி தொப்பாநாயக்கன்பட்டி பெத்தகாப்பு வகையறாக்களை சோ்ந்த குடிபாட்டுக்காரா்களும், நண்பகல்12 மணி முதல் மாலை 5 மணி வரை குப்பமேட்டுப்பட்டி மந்தா நாயக்கா் சின்னபொம்மாநாயக்கா் தலைமையிலான வகையறாக்களும் வழிபட்டனா்.

முன்னதாக மாலையம்மன் கோயில் முன் பொங்கல் வைத்து, கோயில் முன் தரையில் படுத்து மண்டியிட்டு வழிபட்டனா். பின்னா் சாமி மாடுகளை கோயில் முன் ஓடவிடும் மாலைதாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து பக்தா்களும் உற்சாகமாக கலந்து கொண்டு தங்களது கோயில் மாடுகளை எல்லைக்கோட்டிற்கு ஓட விட்டு மகிழ்ந்தனா். பின்னா் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து இவா்களது குலவழக்கப்படி பாரம்பரியமிக்க தேவராட்டம், கும்மி ஆட்டம், ஒயிலாட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com